குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டுமென பாதுகாப்புத் தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதியுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக பிரதமருக்கு நெருக்கமான தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுவது பொருத்தமானது என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். கண்டி சம்பவம் தொடர்பிலான 70 வீத விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் ஜப்பானிலிருந்து நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி நாடு திரும்பியதும் அவசரகாலச் சட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.