இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஸ் அணிகள் பங்குபற்றும் சுதந்திர கிண்ண முத்தரப்பு இருபதுக்கு இருபது தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இன்றையதினம் இலங்கை , பங்களாதேஸ் போட்டியிடவுள்ளன. இன்று இரவு 7 மணிக்கு கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இந்த ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. இரு அணிகளும் ஏற்கெனவே தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளதால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியே இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியாவுடன் போட்டியிடும் என்பது குறிப்பிடத்தக்கது
சுதந்திர கிண்ண முத்தரப்பு போட்டியில் இறுதிப் போட்டிக்கு போக இலங்கை – பங்களாதேஸ் அணிகள் இன்று மோதல்…
137
Spread the love