குளோபல் தமிழ்ச் செய்திகள்
கிளிநொச்சி முரசுமோட்டைப்பகுதியில் உள்ள வரலாற்றுச்சிறப்புமிக்க மூன்று ஆலயங்களில் இனம்தெரியாத நபர்களால் பிரதான விக்கிரகங்கள் உடைக்கப்பட்டும் திருடப்பட்டும் உள்ளது. குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
முரசுமோட்டை சிவா சுப்பிரமணியர் ஆலயத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு ஆலயத்தின் மூல விக்கிரகமான வேல் முறிக்கப்பட்டுள்ளதுடன் களஞ்சிய அறையும் சோதனை இடப்பட்டுள்ளது. அத்துடன் முரசுமோட்டை சேற்றுக்கண்டி முத்துமாரி அம்மன் ஆலயக் கதவுகளும் உடைக்கப்பட்டு முலவிக்கிரகத்தையும் உடைத்துள்ளதுடன் அம்மனுக்கு சாத்தப்பட்டிருந்த தங்கப் பொட்டுக்கள் மற்றும் உண்டியலில் இருந்த பணம் என்பவற்றுடன் ஓர் விகிரகத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
அத்துடன் இரண்டாம்கட்டை பிள்ளையார் ஆலயத்திலும் ஒருபெருக்கிசாதனங்களும் திருடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று ஆலயங்களிலும் ஒரு குழுவினரே கைவரிசையினைக் காட்டியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். வரலாற்றுச்சிறப்பு மிக்க இவ் ஆலயங்களில் களவு போன பெறுமதிகளை விட மூல விக்கிரமத்தினை உடைத்தமையால் இவ் இரு ஆலயங்களுக்கும் கும்பாபிசேகம் செய்ய வேண்டும் என ஆலயங்களின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
1 comment
This is sheer blatant fact of poverty started striking in Sri Lanka.