ஜெர்மனியின் டென்னிஸ் வீரர் ரொம்மி ஹாஸ், சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உலக டென்னிஸ் தரவரிசையில் 2-வது இடம் வரை முன்னேறிய 39 வயதான ரொம்மி ஹாஸ் இதுவரை 15 ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார்.
இந்தியன் வெல்ஸில் நடைபெற்ற ஏடிபி போட்டியுடன் ஓய்வு பெறுவதாக நேற்றையதினம் அவர் அறிவித்துள்ளார். இந்த டென்னிஸ் போட்டியின் இயக்குனராக பங்கேற்றிருந்த ரொம்மி ஹாஸ் கடைசியாக தென் கலிபோர்னியாவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றிருந்தார்.
கடந்த 20 ஆண்டுகளாக தொழில்முறை டென்னிஸ் விளையாடி வருவது தனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகக் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார். கடைசியாக 2013-ல் வியன்னா, மியூனிச்சில் நடந்த ஏடிபி போட்டிகளில் ஹாஸ் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது