உலகின் ஏனைய ஏனைய நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவின் ஜி.எஸ்.டி. வரி, மிகவும் சிக்கலான வரிமுறையாக உள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது . .ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை மாதம் முதல் இந்தியா முழுவதும் அமுல்படுத்தப்பட்ட இந்த வரியின்படி 5, 12, 18, 28 சதவீதம் என 4 வகைகளில் விதிக்கப்பட்டுள்ளன. இந்த முறையால் சில பொருட்களுக்கான வரி அதிகரித்தனால் அந்த பொருட்களின் விலை உயர்ந்தது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி வரி அதிகம் வசூலிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் இருப்பதாக உலக வங்கி தனது ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது. உலகளவில் 115 நாடுகளில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையானது நடைமுறையில் உள்ளது எனவும் ஆனால், இந்தியாவின் ஜி.எஸ்.டி. கூடுதல் வரிவிகிதத்துடனும், அதிக அடுக்குகளுடனும் இருப்பதால் மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது, மிகவும் சிக்கலான வரிமுறையாக உள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது.
அதேவேளை இந்த வரிவிதிப்பு முறைகளில் மாற்றத்தைக் கொண்டுவரும் போது பல மாதங்களுக்கு நாட்டின் பொருளாதார செயல்பாடுகளில் மந்தநிலை ஏற்பட்டாலும், அதன்மூலம் நீண்டகாலத்திற்கு பலன் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை எனவும் உலக வங்கி கூறியுள்ளது