166
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் சரத் அமுனுகம ஆகியோர் பங்கேற்க உள்ளனர். எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள அமர்வுகளில் இரண்டு அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 37ம் அமர்வுகள் ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் இலங்கை குறித்த தீர்மானம் தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் எதிர்வரும் 21ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
Spread the love