குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நோர்வே நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயற்சிக்கப்படுகின்றது. நீதி அமைச்சர் சில்வி லிஸ்ட்ஹாக் ( ( Sylvi Listhaug ) க்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு அண்டர்ஸ் பெஹ்ரிங் பிரீவிக் ( Anders Behring Breivik ) என்ற நபர் நடத்திய தாக்குதலில் 70க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
தேசியப் பாதுகாப்பினை முன்னிலைப்படுத்தாது இவ்வாறு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் உரிமைகளை பாதுகாக்க முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள் நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளன.