முல்லைத்தீவு – முள்ளியவளை – கொண்டைமடு காட்டுப்பகுதியில் இருந்து, ஒரு தொகுதி கைக்குண்டுகள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளால் பாவிக்கப்பட்ட தமிழன் எனப்படும் கைக்குண்டுகள் பல காணப்படுவதாக, முள்ளியவளை காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, முள்ளியளை காவல்துறையினர் குறித்த பகுதிக்கு சென்று கைக்குண்டை அடையாளப்படுத்தி, அது தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கு அறிவித்துள்ளனர்.
இதையடுத்து, விசேட அதிரடிப்படையினர் நேற்று நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய, குறித்த கைக்குண்டுகளை கைப்பந்நி அழித்துள்ளதாகவும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இது, போர் நடைபெற்ற காலத்தில், விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்டு போரின் போது பாவிக்கப்பட்ட தமிழன் வகை கைக்குண்டு எனவும்ம், இந்த கைக்குண்டுகள் குண்டு கவசத்துடன் காணப்பட்டுள்ளதாகவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளார்கள்.