அமெரிக்க புலனாய்வு துறையின் துணை இயக்குனராக இருந்த ஆண்ட்ரூ மெக்கேப் (Andrew McCabe) பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க புலனாய்வு துறையின் துணை இயக்குனராக இருந்த ஆண்ட்ரூ மெக்கேப்அ திபர் டொனால்டு டிரம்பின் அரசியல் எதிரியாக கருதப்பட்டவர். அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்புக்கு ஆதரவாக ஹிலாரி கிளிண்டனின் மின் அஞ்சலில் அவரது நிகழ்ச்சிகள் மற்றும் உரையை ரஷிய உளவுத்துறை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அது குறித்த விசாரணையில் இவர் ஈடுபட்டிருந்தார். தற்போது இவர் விடுமுறையில் இருக்கிறார். இந்த நிலையில் அவர் நீக்கப்பட்டுள்ளார். நாளை மறுதினம் அவரது 50-வது பிறந்த தினம் வரும் நிலையில், அதற்கு 2 நாட்கள் முன்பு இவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணி ஓய்வு பெற்று அவர் முழு ஓய்வு ஊதியம் பெறும் நிலையில் இருந்த அவருக்கு பணி நீக்க உத்தரவை அமெரிக்க சட்டமா அதிபர் ஜெய் செசன்ஸ் பிறப்பித்துள்ளார்.