165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முகநூல் கணக்குகள் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் முகநூல் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. எனினும் இனக் குரோத மற்றும் மதக் குரோத பிரச்சாரங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.
இன நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் வகையிலான முகநூல் கணக்குகள் மற்றும் பக்கங்கள் நீக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறான உள்ளடக்கங்களின் அடிப்படையில் பதிவுகள் இடப்படுகின்றன என்பது குறித்து கண்காணிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love