மொரிசியஸ் ஜனாதிபதி அமீனா குரிப்-பகிம் பதவி விலகியுள்ளார். கடனட்டை மோசடியில் ஈடுபட்டதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையிலேயே அவர் பதவி விலகியுள்ளார். அமீனா குரிப்-பகிம் துபாய் மற்றும் இத்தாலி நாடுகளுக்கு சென்றிருந்த போது தன்னார்வ நிறுவனம் ஒன்று வழங்கிய வழங்கிய கடனட்டையைப் பயன்படுத்தி சுமார் 25 ஆயிரம் டொலர் பெறுமதியான விலை உயர்ந்த பொருட்களை வாங்கியதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டினை அடுத்து அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது
இந்நிலையில், அமீனா குரிப்-பகிம் தனது பதவிவிலகியுள்ளதாகவும் அதற்கான பதவிவிலகல் கடிதத்தை அவர் பாராளுமன்ற சபாநாயகரிடம் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் மார்ச் 23-ம் திகதி வரை அவர் ஜனாதிபதி பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது