மாலைதீவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 139 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மாலைதீவின் ஜனாதிபதி அப்துல்லா யாமீன், அங்குள்ள 12 நாடாளுமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்தமையினை அடுத்து அவர்களையும் அத்துடன் கைது செய்து வைக்கப்பட்டுள்ள எதிர்கட்சி தலைவர்களையும் விடுவிக்க வேண்டும் என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை அடுத்து உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதுடன் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கயூமும் கைது செய்யப்பட்டார். மேலும் அங்கு கடந்த பெப்ரவரி 5ம் திகதி முதல் அவசரகாலநிலைப் பிரகடனமும் அமுலுக்கு கொண்டுவரப்பட்டு அரசு அலுவலகங்கள் அனைத்தும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன. இந்நிலையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 139 பேரை அவசரநிலை விதிகளின் கீழ் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது