குளோபல் தமிழ்pச் செய்தியாளர்
இன்றையதினம் யாழ்ப்பணத்திற்கு சென்ற ஜனாதிபதியின் பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் யாழ்.பிரதான சாலையில் இன்று காலை 8 மணிமுதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட ஆய்வு கூட திறப்பு விழாவுக்காக ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார். அதேவேளை புனித பத்திரிசிரியார் கல்லூரி முன்னாள் அதிபர் அருட்தந்தை பிரான்சீஸ் தலைமையில் இராணுவத்தினர் இடம் சரணடைந்தோர் தொடர்பில் எந்த தகவலும் இல்லாத நிலையில் , அருட்தந்தை அதிபராக இருந்த கால பகுதியில் புனித பத்திரிசிரியார் கல்லூரியில் கல்விகற்ற மாணவர்களும் அருட்தந்தை தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேவேளை போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக வாக்குறுதி அளித்த காவல்துறையினர் மூவரை அழைத்து சென்றதுடன் போராட்டக்கார்களை அமைதியை கடைப்பிடிக்குமாறு கோரினார்கள்.
ஜனாதிபதியுடன் தமது பிரதிநிதிகளை சந்திக்க காவல்துறையினர் ஏற்பாடு செய்தமையால் போராட்டகார்கள் அமைதியை கடைப்பிடித்தனர். எனினும் ஜனாதிபதியை சந்திக்க என அழைத்து செல்லப்பட்டவர்களுக்கு காவல்துறையினர் ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.