கிறிஸ்டியானோ ரொனால்டோ 50 முறை ஹட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்துள்ளார். லா லிகாவில் நேற்று நடைபெற்ற போட்டி ஒன்றில் ரியல் மட்ரிட் – கிரோனா அணிகள் போட்டியிட்ட நிலையில் ரியல் மட்ரிட் அணி 6-3 என வெற்றி பெற்றது.
இதில் ரொனால்டோ நான்கு கோல்கள் அடித்ததன்மூலம் அர்ஜென்டினா மற்றும் கழக அணிகளுக்காக 50 முறை ஹட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்துள்ளார்.
லா லிகாவில் 34 முறையும், சம்பியன்ஸ் லீக்கில் 7 முறையும், அர்ஜென்டினாவிற்காக நான்கு முறையும், கேபா டெல் ரே-யில் இரண்டு முறையும் ஹட்ரிக் கோல் அடித்துள்ளார். அத்துடன் பிரீமியர் லீக், ஐரோப்பியா சம்பியன்ஷிப் குவாலிபையர், பிபா கிளப் உலகக்கோப்பையில் தலா ஒருமுறை ஹாட்ரிக் கோல் அடித்துள்ளார்.
இந்தக் காலப்பகுதியின் தொடக்கத்தில் மோசமாக விளையாடிய கிறிஸ்டியானோ ரொனால்டோ பின்ன சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இதுவரை 22 கோல்கள் அடித்துள்ளார். கால்பந்து போட்டியின் தலைசிறந்த வீரர்களாக கருதப்படுகின்ற ; மெஸ்சி, ரொனால்டோ ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகின்ற நிலையில் மெஸ்சி அனைத்து போட்டிகளிலும் சேர்த்து 37 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது