பலமான கொழும்பை உருவாக்குவோம் என தலைநகர் கொழும்பின் முதல் பெண் மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ள ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். ஐ.தே.க சார்பாக கொழும்பு மாநகர சபையின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற ரோசி சேனாநாயக்க இன்றையதினம் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்
கொழும்பு மாநகர சபையானது மூவின மக்களும் ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் வாழும் நகரம் எனத் தெரிவித்த அவர் தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்பி மூவின மக்களின் ஒத்துழைப்புடன் கொழும்பு மாநகரத்தை அபிவிருத்தி செய்வதுடன் நேர்மை மற்றும் செய்திறன் கூடிய மாநகர சபையாக மாற்றயமைப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னைய ஆட்சி காலத்தில் கொழும்பு மாநகர சபையின் ஆட்சி தம்மிடம் இருந்த போதும் மத்திய ஆட்சி தம்மிடம் இருக்கவில்லை எனவும் தற்போது மத்திய ஆட்சியும் தம்மிடம் இருப்பது பலமாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.