சிரியாவின் அர்பின் பகுதியில் விமானப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் பொதுமக்கள் 17 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2011ம் ஆண்டு முதல் சிரியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்ற நிலையில் அங்கு இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிரியாவின் அர்பின் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையை குறிவைத்து சில விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாகவும் இந்த தாக்குதலில் 2 பெண்கள், 15 குழந்தைகள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டதாகவும் என சிரியாவில் செயல்பட்டுவரும் பிரித்தானிய மனித உரிமைகள்அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த தாக்குதலில் 50 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்இந்த தாக்குதல் குறித்து சிரியா அரசாங்கம் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது