151
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் நீடிப்பார் என தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியில் பாரியளவில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த மறுசீரமைப்புக்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியைத் தவிர்ந்த ஏனைய பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
கட்சி மறுசீரமைப்பு தொடர்பில் நியமிக்கப்பட்ட குழு, இந்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுக்க உள்ளது. கட்சி மறுசீரமைப்பு குறித்த பரிந்துரைகள் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love