171
முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோஸி நிகோலஸை காவல்துறையினர் காவலில் வைத்து விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மறைந்த லிபியா தலைவர் கடாபியிடமிருந்து சட்டவிரோதமாக மில்லியன் கணக்கில் யூரோக்களைப் பெற்றது தொடர்பாவே இவ்வாறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2007 ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது சர்கோஸிக்கு இந்த நிதி கிடைக்கப் பெற்றதாக தெரிவிக்கப்பட்ட போதும் சர்கோஸியின் பணிக்குழு தலைவர் அதனை மறுத்திருந்தார். 2012 தேர்தலின் போதும் அளவுக்கதிகமாக செலவு செய்ததாக பிரான்ஸ் நீதிபதிகள் குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Spread the love