158
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கையொப்பமிடவில்லை. கூட்டு எதிர்க்கட்சியினால் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.
நேற்றைய தினம் வரையில் கூட்டு எதிர்க்கட்சியின் 52 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையொப்பமிட்டிருந்தனர். இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கையொப்பமிட வேண்டிய அவசியமில்லை என கூட்டு எதிர்க்கட்சியினர் கருதுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love