குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீனா மீதான பொருளாதார கெடிபிடிகளை தளர்த்துமாறு அமெரிக்க நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில்லறை வர்த்தக ஜாம்பவான்களான வொல் மார்ட் உள்ளிட்ட சில நிறுவனங்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன.
சீனாவின் பல்வேறு உற்பத்திகள் மீது வரி விதிப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. குறிப்பாக நுகர்வுப் பொருட்கள், தொலைதொடர்பு மற்றும் தொழில்நுட்ப உற்பத்திகளுக்கு எதிராக இவ்வாறு வரி விதிக்கப்பட உள்ளது. அத்துடன் சில வகை வரிகள் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த வரி விதிப்பானது அமெரிக்க குடும்பங்களையும் பாதிக்கும் எனவும் பொருட்களின் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் குறித்த நிறுவனங்கள், ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளன. எனவே வரி விதிப்பது குறித்து நிதானமாக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.