இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தனது முதன்மையானதும், பிரதானமானதுமாக விளங்கும் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பபு தொழிலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ரெலிகொம் சேவையில் முன்னிலை வகித்து வருகிறார். இந்நிலையில் புதிய முயற்சியாக, முகேஷ் அம்பானி பாலிவுட்டில் இறங்க முடிவு செய்துள்ளார்.
அந்த வகையில், பாகுபலியின் உலகளாவிய வெற்றி பொலிவுட்டுக்கு ஏற்கனவே நெருடலாகவே இருந்துவரும் நிலையில், தற்போது அமீர் கான் மஹாபாரதா புராண கதையைத் திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளார். இதனைத் தனது கனவு திட்டமாக கருதும் அமீர்கான், இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கக் 15 முதல் 20 வருடம் தேவைப்படும் எனவும் தனது நேர்காணல் சிலவற்றில் குறிப்பிட்டு இருந்தார்.
இவ்வளவு பெரிய கதையைத் தயாரிக்கக் காலம் மட்டும் அல்ல பணமும் தேவை, இதற்கு முதலீடு செய்யச் சரியான தயாரிப்பாளரை தேடி வந்த நிலையில் அமீர் கானுடன், கைகோர்க்க முகேஸ் அம்பானி இணங்கியுள்ளார்.
ஜியோ நிறுவனத்தின் வாயிலாக ஜியோ டிவி, டிஷ் டிவி, ஜியோ மியூசிக் எனப் பலவற்றில் நேரடியாக இறங்காமல் வர்த்தகம் செய்து வரும் முகேஷ் அம்பானி, தற்போது நேரடியாக முதலீடு செய்ய முடிவு செய்துள்ளார்.
அமீர் கானின் மஹாபாரதா கதையை இந்திய வர்த்தகத்திற்காக மட்டும் அல்லாமல் உலகளவில் கொண்டு சேர்க்கும் வகையில், பீட்டர் ஜாக்சனின் The Lord of the Rings (Peter Jackson) டிரையாலஜி, ஹெச்பிஓ-வின் Game of Thrones வகையில் பிரம்மாண்டமான முறையில் எடுக்கச் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டில் எடுக்க முகேஷ் அம்பானி ஒப்புதல் அளித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் அமீர் கான் தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை.
மஹாபாரதம் என்னும் மிகப்பெரிய கதை ஒரேயொரு திரைப்படமாக எடுப்பதை தவிர்த்து, 3 முதல் 5 பகுதிகளாக எடுக்கவும், இந்தத் திரைப்படத்தைச் சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்காக ஆங்கில வசனத்தை எழுத உலகின் முன்னணி எழுத்தாளர்களை இத்திட்டத்தில் இணைக்கவும் படக் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளd.
இத்திரைக்கதையில் அமீர் கானுக்குக் கர்ணன் கதாப்பாத்திரத்திலேயே நடிக்க ஆசை அதிகமாயினும் தனது உடலுக்கு அது பொருந்தாது என்பதால், கிருஷ்ணன் கதாப்பாத்திரத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமீர் கான் கூறியுள்ளார்.