பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களால், சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட, இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தவிர ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நான்கு உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளனர். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் டி.பி. ஏக்கநாயக்க, நிஷாந்த முத்துஹெட்டிகம, காதர் மஸ்தான், சுசந்த புஞ்சிநிலமே ஆகிய நான்கு உறுப்பினர்களும் இதில் கையொப்பமிட்டுள்ளனர்.
பிரதமரில் நம்பிக்கையில்லை – சபாநாயகரிடம் பிரேரணை கையளிக்கப்பட்டது…
180
Spread the love