இந்தியத் தேர்தல் முறையில் தலையிட்டு மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்தால் முகப்புத்தக நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் செயல்பட்டுவரும் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற அரசியல் தகவல் ஆய்வு நிறுவனம் அமெரிக்கத் ஜனாதிபதித் தேர்தலின் போது முகப்புத்தக நிறுவனத்திடமிருந்து தகவல்களைப் பெற்று மக்கள் மனதில் மாற்றத்தை உண்டாக்கி தேர்தலில் முடிவுகள் மாற பெரிதும் துணை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் டிரம்ப் தனது பிரசார யுத்தியை மாற்றி அமைத்து மக்களைக் கவர்ந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேபோல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், கேம்பிர்ட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்துடன் இணைந்து, வரும் 2019-ம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளப்போகிறார் என பாஜக குற்றம் சுமத்தியுள்ள நிலையில் இந்திய மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.