சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள பிரதான சந்தைப்பகுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட மோர்ட்டார் குண்டு தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றையதினம் மத்தியகிழக்கு நாடுகளில் அன்னையர் தினம் கொண்டாடப்பட் நிலையில் இனந்தெரியாத நபர்கள் குறித்த சந்தைப்பகுதியில் குண்டுவீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ராணுவத்தினர்; 11 பேரும், பொதுமக்களில் சிலரும் உயிரிழந்ததாக முன்னர் தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்பொழுது உய்hழிந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கவுட்டா பகுதியில் உள்ள போராளி குழுவினர் இந்த தாக்குதலை நடத்தியதாக அரசுதரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது