முகப்புத்தகம் மேற்கொண்ட தவறினால் அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் மில்லியன் கணக்கான முகப்புத்தக பயனாளிகளின் தகவல்களை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதனை மார்க்மார்க் ஜுக்கர்பெர்க் ஒப்புக் கொண்டுள்ளார்.
கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக முகப்புத்தக பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளநிலையில் தவறினை ஏற்றுக் கொண்டுள்ள மார்க் நம்பிக்கை மீறல் நடைபெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தான் மிகவும் வருந்துவதாகவும் நேர்மையற்ற செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ள அவர் நாடாளுமன்றத்தின் முன் சோதனை நடத்தவும் தான் மகிழ்ச்சியுடன் தயாராக இருப்பதாதவும் தெரிவித்துள்ளார்.
மேலும் செயலிகள், பயனாளிகளின் தகவல்களை பெறுவது மிக கடுமையாக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். முகப்புத்தகத்தினை தான்தான ஆரம்பித்தது என்பதனால்; என்ன நடந்தாலும் தான்தான் பொறுப்பு எனவும் மார்க் தெரிவித்துள்ளார்.