158
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதியை இலக்கு வைத்தே நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கப்படுகின்றது அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், சபாநாயகர் கரு ஜயசூரியவையும் இலக்கு வைத்தே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இலக்காகக் கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதிக்கு எதிரான சதித் திட்டம் பற்றிய விபரங்கள் விரைவில் அம்பலப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love