250
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான கிளிநொச்சியைச் சேர்ந்த ஆனந்த சுதாகரனை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வழியுறுத்தி தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்றுக்கொள்ளப்பட்டு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிடம் கையளிக்கும் நடவடிக்கையினை இன்று வெள்ளிக்கிழமை (23) முன்னெடுத்துள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இவ் விடையம் தொடர்பாக அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,
கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரன். அவரது மனைவி அண்மையில் இயற்கை எய்தினார்.ஆனந்த சுதாகரனுக்கு 9 மற்றும் 11 வயதில் ஆண்,பெண் பிள்ளைகள் உள்ளனர்.
தாயை இழந்த குறித்த இரு பிள்ளைகளும் இன்று நிர்க்கதியான நிலையில் உள்ளனர். எனவே அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலையினை பொது மன்னிப்பின் அடிப்படையில் ஜனாதிபதி வழங்க வேண்டும். அதனை வழியுறுத்தி தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கைகெழுத்துக்கள் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலையை விரும்பிய பெரும்பான்மை இன பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிக்க உள்ளதோடு, ஆனாந்த சுதாகரனை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய ஜனாதிபதியிடம் வழியுறுத்துவோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.
Spread the love