158
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக செயலாளர் சுதத் சந்திரசேகர பதவி விலகியுள்ளார். 1985ஆம் ஆண்டு முதல் மிக நீண்டகாலமாக சுதத் சந்திரசேகர பிரதமரின் செயலாளராக கடமையாற்றி வந்திருந்தார்.
தனது பதவி விலகல் குறித்த கடிதத்தினை அவர் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அதில் பிரதமரின் அண்மைக்கால நடவடிக்கைகளில் ஏற்பட்ட நம்பிக்கையீனம் காரணமாகவே பதவிவிலகுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பக்கச்சார்பாக செயற்படுகின்றார் எனவும் அவர் குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Spread the love