வடக்கு மாகாண சபையின் ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாகாணங்களின் ஆளுநர்களை இடமாற்றம் செய்யவுள்ள அரசு, வடக்கு மாகாணத்திற்கு, மேல் மாகாண சபையின் ஆளுநராக கடமையாற்றிய கே.சி.லோகேஸ்வரனை நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆளுநர் ஒருவரின் சேவைக்காலம் ஒரே இடத்தில் மூன்று வருடங்கள் என வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதுள்ள அனைத்து மாகாணங்களின் ஆளுநர்களையும் இடம் மாற்றம் செய்யவேண்டிய நிலையில், ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கமைவாக மேல்மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன் வட மாகாண ஆளுநராகவும், தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார மேல்மாகாண ஆளுநராகவும், சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா தென் மாகாண ஆளுநராகவும், மத்திய மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க சப்ரகமுவ மாகாண ஆளுநராகவும், வடமேல் மாகாண ஆளுநர் அமரா பியசீலி ரத்நாயக்க வட மத்திய மாகாண ஆளுநராகவும் மற்றும் வட மத்திய மாகாண ஆளுநர் பி.பீ.திசாநாயக்க வடமேல் மாகாண ஆளுநராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேல் மாகாண சபையின் ஆளுநராக பொறுப்பேற்ற போது