குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
அடுத்த ஜனாதிபதி தேர்தலின் போது நேரடிப் பிரச்சாரத்தில் ஈடுபட போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது கூட்டு எதிர்க்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளருக்காக நேரடியாக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது பிரச்சாரத்தில் ஈடுபட்டதனைப் போன்றே தாம் ஜனாதிபதி தேர்தலிலும் நேரடியாக களத்தில் இறங்கிப் பிரச்சாரம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சி மற்றும் பொதுஜன முன்னணியினால் தெரிவு செய்யப்படும் வேட்பாளரின் சார்பில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.