குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் புதிய வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவார் என ராஜாங்க அமைச்சர் திலிப் வெதாராச்சி தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள அவர் கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் அளித்த எச்சரிக்கையை சரியாக புரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சி மாற்றத்தை விடவும் மக்கள் ஆட்சி முறையில் மாற்றம் தேவை என்பதனையே தேர்தலில் உணர்த்தியுள்ளதாகவும் இந்த அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸ ஆட்சி காலத்தில் நாட்டின் நன்மதிப்பு சர்வதேச ரீதியில் களங்கப்பட்டிருந்தது என சுட்டிக்காட்டியுள்ள ராஜாங்க அமைச்சர் திலிப் வெதாராச்சி தற்போதைய அரசாங்கமே நாட்டிற்கான நன்மதிப்பினை மீளக் கட்டியெழுப்பியதாகத் தெரிவித்துள்ளார்.