குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ம் திகதி தீர்மானிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றில் 16 ஆசனங்களைக் கொண்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குழுக்கூட்டம் எதிர்வரும் 2ம் திகதி நடைபெறவுள்ளதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களும், ஜே.வி.பியும் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதவரளிக்கத் தீர்மானித்துள்ளனர். கடந்த வாரம் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது