குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவில் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவாகி யாழ்.மாநகர முதல்வராக தெரிவு செய்யபட்டு உள்ளார். யாழ்.மாநகர சபையின் சபை அமர்வுகள் இன்றையதினம் திங்கட்கிழமை காலை உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் கூடியது.
யாழ். மாநகர சபை மேயராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
முதல் வாக்கெடுப்பில் முன்னிலைப் பெற்ற ஆர்னோல்டுக்கும், ஈ.பி.டி.பி.-யின் ரெமிடியர்ஸிற்கும் இடையே இரண்டாவது வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்த நிலையில், மேயர் பதவிக்கான போட்டியிலிருந்து விலகுவதாக ரெமிடியர்ஸ் அறிவித்த நிலையில், மாநகர சபை மேயராக ஆர்னோல்ட் தெரிவுசெய்யப்பட்டார்.
தொடர்ந்து இடம்பெற்ற பிரதி மேயர் தெரிவிற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது. அதில் துரைராசா ஈசன் பிரதி மேயராக தெரிவு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் யாழ். மாநகர சபையின் முதலாவது அமர்வு நிறைவுபெற்றதுடன், அடுத்த அமர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என மேயராக தெரிவுசெய்யப்பட்ட ஆர்னோல்ட் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்னோல்ட் – மணிவண்ணன் – றெமீடியஸ் – யார் மேயர்? – இரகசிய வாக்கெடுப்பு –
யாழ். மாநகர சபை மேயரைத் தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தமிழரசுக் கட்சி சார்பில் ஆர்னோல்டும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் மணிவண்ணனும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் றெமீடியஸும் மேயர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இரகசிய வாக்கெடுப்பு தற்போது இடம்பெற்று வருகின்றது.
இரகசிய வாக்கெடுப்பு நடத்துவத இல்லை பகிரங்க வாக்கெடுப்பு நடத்துவதா என்று வாக்கெடுப்பு நடத்தியபோது 25 பேர் இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஆதரவாக வாக்களித்திருந்த நிலையில் 19 பேர் பகிரங்க வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.