குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித்திற்கு வாழ்நாள் போட்டித் தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென் ஆபிரிக்காவிற்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணியின் தலைவராக ஸ்டீவன் ஸ்மித்தும், உப தலைவராக டேவிட் வார்னரும் கடமையாற்றினர்.
மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் பந்தை வேண்டுமென்ற பழுதாக்கி அதன் மூலம், தென் ஆபிரிக்க அணி வீரர்களை ஆட்டமிழக்கச் செய்ய முயற்சித்தமை தொடர்பில் ஸ்மித் உள்ளிட்ட அணியினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்களை அணியின் தலைவர் என்ற ரீதியில் ஸ்மித் ஏற்றுக்கொண்டிருந்தார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஸ்மித்தின் தலைமைப் பதவி நீக்கப்பட்டுள்ளதுடன், ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு சர்வதேச கிரிக்கட் பேரவை தடை விதித்துள்ளது. இந்த நிலையில், அவுஸ்திரேலிய கிரிக்கட் வாரியம் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோருக்கு எதிராக வாழ் நாள் போட்டித் தடையை விதிக்கக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.