159
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் அரசாங்கத்தில் பாரிய மாற்றங்களை உருவாக்கும் என ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். மக்கள் எம்மிடமிருந்து எதனை எதிர்பார்க்கின்றார்களோ அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறனெனினும், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சுதந்திரக் கட்சி ஆதவரளிக்குமா அல்லது எதிராக வாக்களிக்குமா என்பது குறித்து எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானம் அரசாங்கத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love