172
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று(26) கிளிநொச்சியில் விசேட சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சந்திப்பு இன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் மேற்கொண்டு வரும் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஜெனிவா மனித உரிமைகள் ஆணையகத்தின் 37 கூட்டத் தொடரின் பின்னர் வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சந்திக்கும் முதலாவது சந்திப்பு இதுவாகும். இச்சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது
Spread the love