குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
நாங்கள் ஆளும் கட்சியாக இல்லாத போதிலும் , முதல்வர் ஊடாக மக்கள் நலன்சார் விடயங்களை முன்னெடுப்போம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் மு. ரெமிடியஸ் தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர சபையின் இன்றைய அமர்வு முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவுக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் , எதிர்வரும் காலங்களில் எமது கட்சி கோட்பாட்டின் பிரகாரம் மக்கள் நலன் சார்ந்த சகல விடயங்களுக்கும் நாங்கள் பூரண ஆதரவு வழங்கி மக்களுக்கு தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்
நாங்கள் ஆளும் கட்சியாக இல்லாத போதிலும் , எங்களின் கோரிக்கைகளை முன்னேடுத்து செல்வதற்கு முதல்வர் ஊடாக அனைத்து நடவடிக்கையும் முன்னெடுப்போம். முதல்வரின் ஆட்சி நீடிக்க நாம் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம் என தெரிவித்தார்.