குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடியை விடவும் பாரியளவில் நிதி மோசடிகளில் ஈடுபட்ட நபர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதவரளிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிணை முறி மோசடிகளுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என சுட்டிக்காட்டியுள்ள அவர் குற்றவாளிகளை தண்டனை விதிக்கும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தினைப் போன்றல்லாது குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.