கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் திகதியை மத்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க உள்ளதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மேலும் தாமதம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக நபடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகின்ற நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் கண்டிப்பாக அமைக்கப்படும் என தமிழக பா.ஜ.க. தெரிவித்துள்ள வருகின்றது. எனினும் கர்நாடக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் உருவாக்குவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் திகதியை இன்றையதினம் தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. மாநில அரசின் இந்த நடிவடிக்கையானது, ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கும் பா.ஜ.க.வுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இந்த சூழ்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் அது பா.ஜ.க.வின் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும். எனவே, இந்த விஷயத்தில் பா.ஜ.க., இரு மாநிலங்களிலும் உள்ள கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது