ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஏவுகணை விநியோகம் செய்வதாக செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள. ஏமனில் அரச படையினருக்கும் ஹவுத்தி போராளிகளுக்கும் இடையே மோதல்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் அரச படைகளுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படைகள் வான்தாக்குதல்கள் மேற்கொண்டு வருகின்றன.
இதற்கு பழிவாங்கும் வகையில் சவுதி மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை வீசி தாக்குகின்ற நிலையில் கடந்த 25ம்திகதி போராளிகள் வீசிய 7 ஏவுகணைகளை சவுதி கூட்டுப்படையினர் நடுவானில் வழிமறித்து அழித்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஏவுகணை விநியோகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. எனினும் இதனை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது