குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பந்தை பழுதாக்கியதாக அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்ட வீரரும் முன்னாள் உதவித் தலைவருமான டேவிட் வார்னர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அணியின் வீரர்கள் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளனர். தென் ஆபிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி பந்தை வேண்டுமென்றே பழுதாக்கிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில் இந்தக் குற்றச்சாட்டு குறித்து கிரிகக்கட் அவுஸ்திரேலியா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்தநிலையில் சில வேளைகளில் வார்னர் இனி வாழ்நாள் முழுவதிலும் அவுஸ்திரேலிய அணிக்காக விளையாட முடியாத நிலைமை ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அணியின் சக வீரர்கள் வார்னர் மீது சராமரியாக குற்றம் சுமத்தி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.