161
ஊடகவியலாளர்களுக்கான ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் வைபவம் ஒன்றை ஆண்டு தோறும் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஊடகவியலாளர்களின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பணிகள் மற்றும் அவர்களின் பங்களிப்புகள் என்பவற்றை மதிப்பிடுவதற்காக ஊடகவியலாளர்களுக்கான ஜனாதிபதி ஊடக விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடக விருதினை 2018ம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் நடாத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
Spread the love