குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
கிளிநொச்சி கிளிநகர் கிராமசேவையாளர் பிரிவிற்கு உட்ப்பட்ட கரடிப்போக்கு சந்திக்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் நேற்று நள்ளிரவு பதினோரு மணியளவில் திடீர் என ஏற்ப்பட்ட தீப் பரவலினால் விட்டின் மேல் மாடி பாரிய சேதம் அடைந்துள்ளதுடன் பெருமதி வாய்ந்த பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளது
ஒரு மணிநேரத்தின் பின்னரே இராணுவத்தினர்,காவற்துறையினர், மற்றும் யாழ் மாநாரசபை தீயணைப்பு படையினரின் உதவிடுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது இவ்விபத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது
நேற்று இரவு பத்து மணியளவில் குடும்ப அங்கத்தவர்கள் நித்திரைக்கு சென்ற பின்னர் அயலவர் ஒருவர் விட்டின் மேல்மாடியில் தீபற்றி எரிகிறது என வீட்டாருக்கு கூறியதனை தொடர்ந்து வீட்டார் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறி காவற்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர் அதன்பின்னார் ஒரு மணிநேரத்தின் பின்னரே இராணுவத்தினரின் நீர்த்தாங்கி வாகனம் மற்றும் யாழ் மாநகர சபையின் தீயணைப்பு படையினர் வருகை தந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்
கிளிநொச்சியை பொறுத்தவரை பாரிய பல தீ விபத்துக்கள் இடம்பெற்ற பொழுதும் கிளிநொச்சிக்கு என ஒரு தீயணைப்புப் படை வழங்கப்படவில்லை கிளிநொச்சியில் உள்ள மக்கள் பிரதி நிதிகள் தீயணைப்பு பிரிவை தயார் செய்துவிட்டோம் என வாயளவில் கூறிக் கொண்டாலும் எவையும் நடைபெற வில்லை இந்த தீவிபத்தில் குறித்த வீட்டாருக்கு சுமார் ஐம்பது லட்சங்களுக்கு மேல் நஷ்டமாகி உள்ளது கிளிநொச்சிக்கு என ஒரு தீயணைப்பு படை இருக்குமாயின் இவ்வாறான நஷ்டங்களை குறைத்துக் கொள்ளாலாம் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.