குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நேட்டோ படையினர் ஐரோப்பாவில் துரித கதியில் இடம் நகர்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐரோப்பா முழுவதிலும் வேகமாக படையினரை இடம் நகர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ரஸ்யாவுடன் ஏதேனும் யுத்தம் ஏற்பட்டால் எல்லைப் பகுதிகளில் படையினர் நகர்வதற்கு காலம் தாமதித்தால் பாதகமாக அமையக் கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் சில நாடுகளில் பாரியளவிலான இராணுவத் தளவாடங்களை இடம் நகர்த்துவதல் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுகின்றன. குறிப்பாக பாலங்கள் மற்றும் சுரங்க வழிகளில் பாரிய இராணுவ தளவாடங்களை இடம் நகர்த்த முடியாத நிலைமை காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.இராணுவத்தினர் சுதந்திரமாக இடம் நகர்வதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்வதன் மூலம், ஆபத்துக்களை வரையறுத்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.