குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
வடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜொங் உன்னுக்கும், சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கிற்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. வடகொரியா ஜனாதிபதி கிம் ஜொங் உன், சீனாவிற்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 2011ம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் முதல் தடவையாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் வெளிநாடு ஒன்றுக்கு பயணம் செய்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதியில் தென் கொரியா மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடத்தப்பட உள்ள நிலையில், சீனாவின் ஆலோசனைகளையும் நிலைப்பாடுகளையும் தெரிந்து கொள்வதற்காக கிம் ஜொங் உன் இந்த பயணத்தினை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீனாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையில் மிகச் சிறந்த பொருளாதார உறவுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.