இளையவர்களின் விவாதத்திறனை மேம்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் விவாதச் சுற்றுப்போட்டியொன்றை நடாத்தவுள்ளது. பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை கல்வியை நிறைவு செய்த 35 வயதுக்குட்பட்ட இளையவர்கள்(திறிந்த பிரிவு) என இரு பிரிவுகளாக இவ் விவாதச் சுற்றுப்போட்டி நடைபெறவுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கான போட்டி யாழ்.மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் திறந்த பிரிவு போட்டிகள் நாடாளவிய ரீதியில் நடாத்தப்படவுள்ளன.
திறந்த பிரிவில் பங்குபற்ற விரும்புவோர் ஐந்து பேர் கொண்ட அணியொன்றை அமைத்து அவ் அணிக்கு ஈழத்து தமிழ் அறிஞர் ஒருவரின் பெயரினைச் சூட்டி போட்டியில் கலந்து கொள்ள முடியும். வெற்றி பெறும் அணிகளுக்கு பெறுமதி வாய்ந்த பரிசில்கள் வழங்கப்படவுள்ளதுடன் சிறந்த விவாதியாக தெரிவுசெய்யப்படுபவர்களுக்கு விசேட விருதுகளும் வழங்கப்படவுள்ளன. போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் பாடசாலைகளும் திறந்த பிரிவினரும் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 30ம் திகதிக்கு முன்னதாக தமது விண்ணப்பங்களை தலைவர் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் இல 28 குமாரசாமி வீதி கந்தர்மடம் எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் போட்டி குறித்த நிபந்தனைகள் மற்றும் போட்டித் தலைப்புக்கள் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு தமிழ்ச் சங்க இணையத்தளத்தை பார்வையிடுமாறும் தமிழ்ச் சங்கத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.