185
புனித வார பெரிய வெள்ளியான இன்று (30) நாட்டின் பல பாகங்களிலும் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் சிலுவைப்பாதை இடம் பெற்றுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை காலை இடம் பெற்ற சிலுவைப்பாதை மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து காத்தோலிக்க தேவாலயங்களிலும் இடம் பெற்றது.
மன்னார் மறைமாவட்டத்தின் தாய் பங்காக திகலும் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் புனித வார பெரிய வெள்ளியான இன்று காலை 6.30 மணியளவில் விவிலிய சிலுவைப்பாதை இடம் பெற்றது. பேசாலை இணை பங்குத்தந்தை அருட்திரு சாந்தன் அடிகளார் தலைமையில் இடம் பெற்ற விவிலிய சிலுவைப்பாதை சடங்கில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love