175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நம்பிக்கையில்லா தீர்மானம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எந்த வகையிலும் பாதிக்காது என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரதமர் தோல்வியைத் தழுவினால், வேறு ஓர் பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்னும் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் தனிப்பட்ட ரீதியில் தீர்மானம் எடுக்கப்படாது எனவும் கூட்டு அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Spread the love