152
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9960 மாணவ மாணவியர் ஒன்பது ஏ சித்தியைப் பெற்றுக் கொண்டுள்ளனர். 2017ம் ஆண்டுக்காக நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய 9960 மாணவ மாணவியர் இவ்வாறு சிறப்பு சித்தியடைந்துள்ளனர்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரம் கற்பதற்கு 73 வீதமான மாணவ மாணவியர் தகுதி பெற்றுக்கொண்டுள்ளனர். கடந்த 2016ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 4.43 வீதமான மாணவர்கள் கணித பாடத்தில் அதிகளவில் சித்தியெய்தியுள்ளனர் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
Spread the love