குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
மலேசிய மத்திய வங்கியின் மீது சைபர் தாக்குதல் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. போலியான வயர் ட்ரான்ஸ்பர் முறையில் பணத்தை கொள்ளையிடுவதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் இந்த சைபர் தாக்குதல் மூலம் எந்தவொரு பணமும் கொள்ளையிடப்படவில்லை எனவும் இந்த தாக்குதல் முயற்சியுடன் தொடர்புடைய எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லைஎனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குற்றச் செயல் முயறிடிக்கப்பட்டுள்ள போதும் இந்த தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பில் முழு அளவிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் கிடைக்கும் தகவல்கள் ஏனைய நாடுகளில் இடம்பெறும் கொள்ளைகளையும் தடுக்க உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பங்களாதேஸில் 81 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொள்ளையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.